Sunday, December 21, 2014

லவ் பன்றதுக்கு இவ்ளோ பித்தலாட்டம் பன்னவேண்டி இருக்கு...


ஒரு பையன் தன்னோட காதலிக்கு Call பண்ணுறான்.
அப்போஅந்த பொண்னோட அப்பா போனை எடுக்கிறார்.
பிறகு அந்த பையன் எப்படி அவர்கிட்ட சமாளிக்கிறான்னுபாருங்க.
UNCLE : hellooo....யாருங்க பேசுறது?
BOY : சார்,நான் CITY BANK'ல இருந்து branch manager அழகேசன் பேசுறேன்.
UNCLE : சொல்லுங்க சார்.என்ன விசயம்?
BOY : சார்,உங்க பொண்ணு காயத்ரி ஏதோ லோன் வேணும்னு கேட்டிருந்தாங்க.நாங்க லோன் தரலாம்னு இருக்கோம்.So,உங்க பொண்ணுகிட்ட சில Details கேக்கணும்.அவங்கள கொஞ்சம் கூப்பிடுங்க சார்.
UNCLE : ஓ....அப்படியா சார்.ஒரு நிமிசம் லைன்ல இருங்க சார்.இப்ப என் பொண்ணு வருவா.
GIRL : Hello,நான் காயத்ரி பேசுறேன்.இப்ப சொல்லுங்க.
BOY : ஏய்.... அம்முகுட்டி,நான் தான் விஷ்வா பேசுறேன்.உங்க அப்பன் சொட்ட தலையன் போனை எடுத்துட்டான்.அதான் பேங்க் மேனேஜர்னு சொன்னேன்.லிங்காபடத்துக்கு டிக்கெட் எடுத்துட்டேன்.நீ உடனே கிளம்பி ஆல்பட் தியேட்டர்க்கு வாடா செல்லம்.
GIRL : ஓகே சார்.நான் இப்பவே உங்க ஆபிசுக்கு வாறேன் சார்.நீங்க அங்கயே வெயிட் பண்ணுங்க.அஞ்சு நிமிசத்துல நான் வந்திடுவேன்.
UNCLE : சீக்கிறம் கிளம்பி போமா.அவர ரெம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிடாதே.
GIRL : ஓகே டாடி.இதோ கிளம்பிட்டேன்.

# நீதி
லவ் பன்றதுக்கு இவ்ளோ பித்தலாட்டம் பன்னவேண்டி இருக்கு

"முழு ஈடுபாடு இல்லாமல் செய்யும் எந்த செயலும்... முழு பயன் தராது"


வீட்டை அழகாக வைத்திருக்க விரும்பிய ஒருவர்
...நிறைய செடிகொடிகளை நட்டு வைத்தார்.... உரமிட்டார்.... நீர் பாய்ச்சினார்....
செடிகள் பெரிதாக வளரவில்லை.
பக்கத்தில் ஒரு பூங்காவைப் பராமரிக்கும் கிழவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்.
இரண்டே மாதங்களில் செடி கொடிகள் செழித்து தழைத்து வளரத் தொடங்கின.
வீட்டின் உரிமையாளருக்கு வியப்பு.
அதே தண்ணீர். அதே உரம். அதே இடம்.
இது எப்படி சாத்தியம்?
கிழவர் சொன்னார்: "அய்யா! நீங்கள் அலுவலகத்திற்குப் போகும் அவசரத்தில் நீர்பாய்ச்சுகிறீர்கள்.
நான், குழந்தைக்கு உணவு தரும் அன்னையின் மனநிலையில் இருந்து நீர்பாய்ச்சுகிறேன்..."
அப்பொழுது தான் உரிமையாளருக்கு புரிந்தது...
முழு ஈடுபாடு இல்லாமல் செய்யும் எந்த செயலும்... முழு பயன் தராது...என்று. 

கல்யாணிக்கு கல்யாணம்


கல்யாணிக்கு, கல்யாணம் பண்ண கல்யாணி அப்பா கல்யாண சுந்தரம் கல்யாணிக்கு கல்யாணம் என்ற மாப்பிளைய கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினார்.
கல்யாணிக்கு கல்யாணம் புடிக்காம கல்யாணம் வேணாம்னு சொல்ல, கல்யாணி கல்யாணத்தைப் புடிக்காமத்தான் கல்யாணம் வேணாம்னு சொல்றலோன்னு கல்யாணி கல்யாணத்துக்கு கல்யாணம் வேணாம்னு கல்யாணராமன் என்ற மாப்பிளையை பார்க்க,
கல்யாணி கல்யாணமே வேணாம்னு கல்யாணராமன்ட்ட சொல்ல,
கல்யாணி அப்பா கல்யாணி கல்யாணத்த எப்படி நடத்துவாரு?
யோசிங்க!

Saturday, December 20, 2014

இந்தியண்டா ..



இந்தியரும் அமெரிக்கரும்
ஒரு சாக்லெட் கடைக்குள்
நுழைந்தனர்.
அனைவரும் பிஸியாக இருந்த
நேரம் அமெரிக்கர் 3 சாக்லெட்
பார்களை யாருக்கும்
தெரியாமல்
எடுத்து தனது பாக்கெட்டுக்குள்
போட்டுக் கொண்டார்.
சிறிது நேரம்
கழித்து இருவரும்
கடைக்கு வெளியே வந்தனர்.
அமெரிக்கர் தான் யாருக்கும்
தெரியாமல் எடுத்த 3 சாக்லெட்
பார்களையும்
தனது பாக்கெட்டிலிருந
்து வெளியே எடுத்து இந்தியரிடம்
காட்டி,
'நாங்கெல்லாம் யாரு!
அப்பவே நாங்க அப்படி..!
பார்த்தியா யாருக்கும்
தெரியாம 3 சாக்லெட்
பார்களை எடுத்து கொண்டு வந்துட்டேன்
பார்த்தியா?..
என்று பெருமை அடித்ததோடு மட்டுமில்லாமல்
உன்னால இதைவிட
பெரிசா ஏதாவது செய்ய
முடியுமா? என்று சவால்
வேறு விட்டார் இந்தியரிடம்.
விடுவாரா இந்தியர். '. உள்ள
வா. உனக்கு உண்மையான
திருட்டுன்னா என்னன்னு காட்டுறேன்னு சொல்லி அமெரிக்கரை சாக்லெட்
கடையின் உள்ளே அழைத்துச்
சென்றார்.
விற்பனை கவுன்டரில் இருந்த
பையனிடம் சென்ற இந்தியர்,
அவனிடம் கேட்டார்,
வித்தை காட்டுறேன்
பார்க்கிறியா?..
பையனும்
சரியென்று தலையாட்ட
கவுண்டரில் இருந்து 1
சாக்லெட் பார் எடுத்து,
அதனை தின்று முடித்தார்.
அடுத்து இன்னொரு சாக்லெட்
பார் எடுத்து அதனையும்
தின்று தீர்த்தார். பிறகு 3வதாக
ஒரு சாக்லெட் பார்
எடுத்து அதனையும்
தின்று முடித்துவிட்டு கவுன்டரில்
இருந்த பையனை ஏறிட்டுப்
பார்த்தார்.
கவுன்டரில் இருந்த பையன்
கேட்டான், ' எல்லாம் சரி. இதில்
வித்தை எங்கே இருக்கிறது?.'
இந்தியர் அமைதியாக பதில்
அளித்தார்,
' என் ஃப்ரெண்டோட பாக்கெட்ல
செக் பண்ணிப்பாரு. நான்
சாப்பிட்ட 3 சாக்லெட் பாரும்
இருக்கும்.'

டி.வில ஒரு "ஆட்ட" சாரி.... "விவசாயியை" பேட்டி எடுக்கறாங்க...







" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..? "
" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?! "
"வெள்ளைக்கு..! "
" புல்லு..! "
" அப்ப கருப்புக்கு..?! "
" அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..! "
" இதை எங்கே கட்டி போடறீங்க..? "
" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "
" வெள்ளையை..! "
" வெளில இருக்குற ரூம்ல..! "
" அப்ப கருப்பு ஆட்டை..?! "
" அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..!! "
" எப்படி குளிப்பாட்டுவீங்க..? "
" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "
" கருப்பு ஆட்டை..! "
" தண்ணில தான்...! "
" அப்ப வெள்ளையை..?! "
" அதையும் தண்ணிலதான்..! "
பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பாகிடறார்..
" லூசாய்யா நீ... ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே செய்யுறே... அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப வெள்ளையா..? கருப்பானு.? கேட்டுட்டே இருக்கே..?!! "
" ஏன்னா வெள்ளை ஆடு என்னுது..!! "
" அப்ப கருப்பு ஆடு..?!! "
" அதுவும் என்னுதுதான்..!! "
" டேய்ய்ய்ய்ய்ய்ய்....!!! "

எல்லாம் விதியின்படிதான் நடக்கும்.




ஒரு நாள் ...எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் :
"மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் "
மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !!
எமதர்மன் சொன்னான் : " நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது ....."
மனிதன்: " சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் "
எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் !
அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!!
மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் ....
எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்னான் "நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய் ,அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன்...என்னவென்றால் பட்டியலின் மேலிருந்து இல்லாமல் ,பட்டியலின் கிழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான் "!!!
கதையின் நீதி :
எல்லாம் விதியின்படிதான் நடக்கும்.
நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட....!!!

பாவம்யா பசங்க....




ஏன் மாணவர்கள் தேர்வில்
அதிக மதிப்பெண்கள்
பெறுவதில்லை....?
.
அது மாணவர்களின்
தவறு கிடையாது,
.
அவர்களுக்கு படிப்பதற்கு நேரமே கிடைப்பதில்லை..
.
வருடத்தில் 365 நாட்கள்
மட்டுமே உள்ளது ஒரு பெரிய
குறை..
.
உதாரணத்திற்கு ஒரு மாணவனின்
ஒரு கல்வி ஆண்டை எடுத்துக்கொள்வோ
ம்..
.
1.ஒரு வருடத்திற்கு 52
ஞாயிற்றுகிழமைகள்..
மற்ற நாள்கள் 313 (365-52=313)
.
2.கோடை விடுமுறை 50.
ரொம்ப வெப்பமான காலம்
என்பதால் படிப்பது கஸ்டம்.
மீதி 263 நாள்கள் (313-50=263).
.
3. தினமும் 8 மணி நேரம்
தூங்கும் நேரம் என்பதால்
(கூட்டினால் 122 நாட்கள்
வருகிறது).
மீதி 141 நாட்கள் (263-122=141).
.
4. 1 மணி நேரம்
விளையாட்டு நேரம்
வளரும்
பசங்களுக்கு நல்லது. நாள்
கணக்கு படி 15 நாள்.
மீதி 126 நாட்கள் (141-15=126).
.
5. 2 மணி நேரம்
சாப்பாட்டு நேரம் . நன்றாக
மென்று சாப்பிடு என்று அறிவுறுத்தப்படு
வதால் 30 நாள்கள்.
மீதி 96 நாட்கள் (126-30=96).
.
6. 1 மணி நேரம்
பேசியே கழிக்கிறோம்.
நிறைய பேசினால்
நிறைய கத்துகலாம். 15
நாள் வருகிறது.
மீதி 81 நாட்கள் (96-15=81).
.
7. ஒரு வருடத்திற்கு 35
நாட்கள்
தேர்வு எழுதியே கழிப்பதால் ,
மீதி 46 நாட்கள்
(81-35=46).
.
8. காலாண்டு,அரையாண
்டு, பண்டிகை தினம்
விடுமுறைகள் 40 நாட்கள்..
மீதி 6 நாட்கள்(46-40=6).
.
9. உடம்பு சரியில்லாமல்
எடுக்கும்
விடுப்பு குறைத்தது
3 நாட்கள். மீதி 3 நாட்கள்
(6-3=3).
.
10. சினிமா, உறவினர்
திருமணம்,விழாக்கு 2
நாள் போய்விடும்.
மீதி ஒரு நாள்
(3-2=1).
.
11. அந்த ஒரு நாளும் அந்த
பையன் பிறந்த நாள்..
.
பின்ன எப்படி தேர்வில்
அதிக மதிப்பெண்கள்
பெறமுடியும்....?








நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம்,
நேற்று காலை 8 மணிக்கு பூஜா என்ற
பெண்ணை, அவளது சொந்த மாமா, மற்றும்
விநாயகம் என்ற ஆட்டோ டிரைவர் இருவரும்
வீட்டில் இருந்து கதற கதற இழுத்து சென்று
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
LKG ல சேத்துட்டாங்க
சே.......பாவம்ல





பிடிச்சா கமண்ட்
பண்ணுங்கள்..