Sunday, June 23, 2013

தயவு செய்து கொஞ்சமாச்சும் சிரிங்க இல்ல நான் அழுதுடுவன்




"பாடம் எல்லாம் முடிஞ்சிப் பேச்சு.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. எதுவா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க.."

"சார் உங்க பெண்ணு பேரு என்ன சார்?"



<<<<<<<<<<>>>>>>>>>>



"தலைவருக்கு எத்தனை மனைவி?"

"சட்டப்படி ஒண்ணு, 'செட்டப்'படி ஏழு!"


<<<<<<<<<<>>>>>>>>>>


ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூக்கினான். இது என்ன காலம்?

மாணவி: கொசுவே இல்லாத காலம் சார்...!


<<<<<<<<<<>>>>>>>>>>


"தலைவர் அதிகமா முற்போக்கை விரும்பறாரா? பிற்போக்கை விரும்பறாரா?

"ரெண்டையும் விட அதிகமா பொறம்போக்கைத்தான் விரும்புகிறார்."


<<<<<<<<<<>>>>>>>>>>


நிருபர்: உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்தே, இந்த சோப்பைத் தான் குளிக்கப் பயன்படுத்துறீங்களாமே...?

நடிகை: அதெல்லாமில்லீங்க... இது 'கரைஞ்சதும்' வேற புது சோப் வாங்கிடுவேன்...!


<<<<<<<<<<>>>>>>>>>>


"அது ரொம்ப பணக்கார வீட்டு நாய் போலிருக்கு."

"எப்படி சொல்றீங்க?"

"வாலாட்டாம, காலாட்டிக்கிட்டு இருக்குதே."


<<<<<<<<<<>>>>>>>>>>


"ஆபரேஷன் பண்ணினா பிழைக்க முடியுமா டாக்டர்?"

"நான் பிழைக்கிறதே ஆபரேஷன் பண்ணித்தானே!"

காமெடிதாங்க நம்புங்க





"தினமும் காலையில் வெறும் வயிற்றில் நடங்க.."

 "யார் வயிற்றின் மீது டாக்டர்..?"

<<<<<<<<<<>>>>>>>>>>


"வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?"

 "சம்பளம் கைக்கு வந்ததும்..."

"சம்பளம் எப்போ கைக்கு வரும்?"

"கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?


<<<<<<<<<<>>>>>>>>>>


"கல்யாணத்தை ஆயிரங்காலத்துப் பயிர்னுதானே சொல்லுவாங்க.. நீங்க என்ன இரண்டாயிரங் காலத்துப் பயிர்னு சொல்றீங்க?"

"ஹி.. ஹி.. நான் சொன்னது இரண்டாங் கல்யாணத்தை!"


<<<<<<<<<<>>>>>>>>>>



"இந்த சிகரெட் பிடிக்கறதை விட்டுடப் போறேன்."

"நிஜமாவா?"

"ஆமாம்.. இதுக்கு மேல பிடிச்ச கைய சுட்டுடும்."


<<<<<<<<<<>>>>>>>>>>


"உங்க மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா.. கேரட் அல்வா-னு சொல்லிட்டு வர்றியே ஏன்?"

"கேரட் அல்வா-ன்னா உயிரையே விட்டுடுவேன்-னு அவங்க சொன்னாங்களே.."


<<<<<<<<<<>>>>>>>>>>


"முனியாண்டி! நீ அடிச்ச கொள்ளை நிரூபணமாயிடுச்சு அதனால் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்!"

"எஜமான்! கண்ணைக் கட்டி வாயைக் கட்டி அடிச்ச பணமுங்க கொஞ்சம் கருணை காட்டுங்க!

நகைச்சுவை கதை






ஒரு ஊர்ல ஒரு நெறைய பேரு இருந்தாங்களாம் ( ஒருத்தன் நு ஆரம்பிச்சா ஒருத்தன் தானான்னு கேப்பீங்க).. அந்த நெறைய பேருல ஒருத்தர் செத்து போயிட்டாராம்….
அப்போ எல்லாருக்கும் ஒரு டவுட்டு ….
செத்தவன எரிக்கிறதா? புதைக்கிறதா ??
எரிச்சா பிரச்சனை இல்லை….. புதைச்சா ரெண்டு பிரச்சனை…..
புதைச்ச இடத்துல புல்லு முளைக்குமா முளைக்காதா
முளைக்கலன்னா பிரச்சனை இல்லை… முளைச்சா ரெண்டு பிரச்சனை…..
மாடு திங்குமா திங்காதா…….
திங்கலன்னா பிரச்சனை இல்லை…. தின்னா
ரெண்டு பிரச்சனை…….
பால் குடுக்குமா குடுக்காதா?
குடுக்கலன்னா பிரச்சனை இல்லை, குடுத்தா ரெண்டு பிரச்சனை …
குடிக்க்கலாமா வேண்டாமா ?
குடிக்கலன்னா பிரச்சனை இல்லை… குடிச்சா ரெண்டு பிரச்சனை…..
குடிச்சவன் பொழைப்பானா மாட்டானா?
பொழச்சுட்டா பிரச்சனை இல்லை… பொழைக்கலன்னா ரெண்டு பிரச்சனை….
அவன எரிக்கிறதா புதைக்கிறதா?
எரிச்சிட்டா பிரச்சனை இல்லை……. புதைச்சா?????



கதைய தொடரவா வேண்டாமா??

பைத்தியம் புடிக்குரமாதிரி இருக்குதா இல்லையா ??

செம காமடி - இரண்டு பிரச்சனை.





அவர் இந்தக் கதையை
படிக்கலன்னா பிரச்ச‍னை இல்லை படிச்சா இரண்டு பிரச்சனை.
அவர்க்கு பைத்தியம் பிடிக்குமா? பிடிக்காதா?
பைத்தியம் பிடிக்க‍லன்னா பிரச்ச‍னை இல்ல. பிடிச்சா இரண்டு பிரச்சனை
கீழ்ப்பாக்க‍த்துல சேக்க‍லாமா வேண்டாமா-ன்னு பிரச்சனை
சேர்க்க‍லன்னா பிரச்ச‍னை இல்ல. சேர்த்தா இரண்டு பிரச்சனை
டாக்டர் எப்ப‍டி பைத்தியம் பிடிச்ச‍துன்னு கேட்பாரா? மாட்டாரான்னு
கேக்காட்டி பிரச்ச‍னை இல்ல‍. கேட்டுட்டா இரண்டு பிரச்ச‍னை
காரணத்தை சொல்வதா ? வேண்டாமா ன்னு
காரணத்தை சொல்லாக்காட்டி பிரச்ச‍னை இல்ல‍. சொல்லிட்டா இரண்டு பிரச்ச‍னை
அவரு பார்ப்பாரா? மாட்டாரான்னு
பார்க்காம இருந்தாருன்னா பிரச்ச‍னை இல்ல‍. பார்த்துட்டா இரண்டு பிரச்ச‍னை
அவர் இந்தக் கதையை படிப்பாரா மாட்டாரா ன்னு
அவர் படிக்கலன்னா பிரச்ச‍னை இல்லை படிச்சா இரண்டு பிரச்சனை.
அவர்க்கு பைத்தியம் பிடிக்குமா? பிடிக்காதா?
பைத்தியம் பிடிக்க‍லன்னா பிரச்ச‍னை இல்ல. பிடிச்சா இரண்டு பிரச்சனை
கீழ்ப்பாக்க‍த்துல சேக்க‍லாமா வேண்டாமா-ன்னு பிரச்சனை
சேர்க்க‍லன்னா பிரச்ச‍னை இல்ல. சேர்த்தா இரண்டு பிரச்சனை
டாக்டர் எப்ப‍டி பைத்தியம் பிடிச்ச‍துன்னு கேட்பாரா? மாட்டாரான்னு
கேக்காட்டி பிரச்ச‍னை இல்ல‍. கேட்டுட்டா இரண்டு பிரச்ச‍னை
காரணத்தை சொல்வதா ? வேண்டாமா ன்னு
காரணத்தை சொல்லாக்காட்டி பிரச்ச‍னை இல்ல‍. சொல்லிட்டா இரண்டு பிரச்ச‍னை
அவரு பார்ப்பாரா? மாட்டாரான்னு
பார்க்காம இருந்தாருன்னா பிரச்ச‍னை இல்ல‍. பார்த்துட்டா இரண்டு பிரச்ச‍னை
அவர் இந்தக் கதையை
படிக்கலன்னா பிரச்ச‍னை இல்லை படிச்சா இரண்டு பிரச்சனை.

இன்னும் இந்தக் கதைய தொடர்ந்தா இரண்டு பிரச்சனை 

உங்களுக்கு பைத்தியம் பிடிக்குமா பிடிக்காதா ???????? 

Sunday, June 9, 2013

ங்கொய்யால..











ஒருவர் உங்கள் மீது கல் எறிந்தால்.!

நீ அவர்கள் மீது பூவை எறி..!

மறுபடியும் கல்லை எறிந்தால்..!

நீ பூந்தொட்டியை எறி..!

ங்கொய்யால சாவட்டும்..!