Saturday, December 22, 2012

நாங்கெல்லாம் பூச்சிக்கே பூச்சி காட்டுவோம்ல.


எப்புடியெல்லாம்   வேலைக்கு கூட்டிக்கொண்டு போகவேண்டியிருக்கு பாருங்க மாக்கா.....



பூச்சி night walking போச்சு .
ஒரு பூச்சிக்கு ரொம்ப குளிரிச்சு ,
இன்னொரு
பூச்சிக்கு குளிர்ல ,Why?
அது "கம்பளி பூச்சி "
எப்புடி !!! ???????

 நாங்கெல்லாம் பூச்சிக்கே பூச்சி காட்டுவோம்ல.


பெண் 1 : ரேஷன் கடைல சர்க்கரை,அரிசி,பருப்பு போடுறாங்க ..!!

பெண் 2 : 'உளுந்து' போடுறாங்களா …??

பெண் 1 : இல்ல 'உட்கார்ந்து'தான் போடுறாங்க ..



நாய் கடிக்கு முதலில் என்ன செய்யனும்?

நாய்கிட்டே போய் காலை கொடுக்கனும்.



வாத்தியார் : டேய் முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?

மாணவன் :  நாங்க எல்லாரும் முட்டாளுங்க சார் நீங்க எங்களை அடிக்கிறதால அடி முட்டாள் சார்



நண்பனுக்கும், நல்ல நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?

நீங்க உடம்பு சரியில்லாம, மருத்துவமனையில் இருந்தா,
நண்பன் சொல்லுவான்,, " சீக்கிரம் குணமடைஞ்சு வீட்டுக்கு வரணும்டா..!

நல்ல நண்பன் சொல்லுவான்.. " நர்ஸ் டக்கரா இருக்கா மாப்ளே.. கொஞ்சம் ஆற அமர டிஸ்சார்ஜ் ஆவு..!



காதலி: ஏங்க நாம ஓடி போக போற விஷயம் அப்பாவுக்கு தெரிஞ்சி போச்சிங்க...

காதலன்: ஐயோ அப்புடியா என்ன சொன்னாரு?
காதலி: செலவுக்கு 5000 ரூபா பணம் குடுத்தாரு
காதலன் : ????!!!
காதலி: என் தங்கச்சிக்கும் தெரிஞ்சி போச்சுங்க....
காதலன்: ஐயோ.. அவ என்ன சொன்ன?
காதலி: அவளும் கூட வரணும்கரா ....
காதலன்: ??!!!



ஒருவர் : நேத்து எங்க வீட்டுல திருடன் வந்து எல்லாத்தையும் தூக்கிட்டு போயிட்டான்..

மற்றொருவர் : நீங்க தான் துப்பாக்கி வச்சிருக்கீங்களே...

ஒருவர் : நல்ல வேளை.. அத டிராவுல வச்சி பூட்டி வச்சிருந்தேன்... இல்லன்ன அதையும் எடுத்துட்டு போயிருப்பான்...

மற்றொருவர்: ????!!!!!



அவர் : நேத்து உங்ககாருக்கு எப்படி Accident ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?
அவர் : தெரியுது…
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை


ஒருவர்: தீயணைப்பு நிலையம் இங்கே இருந்ததே... இப்ப காணோமே?

மற்றவர்: போன வாரம்தான் தீப்பிடிச்சி, எரிஞ்சி போச்சி..!




ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது?
மாணவன் : தெரியாது சார்!
ஆசிரியர் : பெஞ்சின் மேல் ஏறி நில்லுடா..!
மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்?


போனில்...
''நாங்க உஙக மனைவியை கடத்தி வைச்சுருக்கோம்..ஐந்து லட்சரூபாய் கொடுத்தா விட்டுடறோம்...''
''ஐந்து என்ன ..பத்துலட்சரூபாயே தரேன்..ஆனாதிருப்பி அனுப்பிச்சடாப்பிடாது..'




நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல:

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..

கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..

. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். ..

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்..

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...

நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....

கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு....

# # # #
நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது..


சீக்கரமே பணத்தை பெருக்க என்ன வழி?




சீக்கரமே பணத்தை பெருக்க என்ன வழி?
<>
<>
<>
 <> 
<>
<>
<>
 <> 
<>
<>
<>
 <> 
<>
<>
<>
 <> 
<>
<>
<>
<>


கீழே போட்டுட்டு விளக்குமாறு எடுத்து பெருக்க வேண்டியதுதான்....
<>
<>
<>
<>

( ஹி ஹி ஹி .......ஏமாந்துட்டிங்களா).

<>
<>
<>
<> 


வந்ததுதான் வந்திங்க இதையும் படிச்சுட்டு போங்க .....................

வேலு : அந்த விமான விபத்து எப்படி நடந்தது ?
பாக்கி : யரோ ஒரு பாராசூட் வீரர் விமானம் பறந்துகிட்டு இருந்தப்ப குறுக்க நின்னு லிஃப்ட் கேட்டாராம் .. ..



கோபு : ஓட்டப்பந்தயத்துல தங்க மெடல் வாங்கினா "ஊக்க மருந்து"ன்னு சொல்லி தடை செஞ்சிடுறாங்க. சரி கடைசில வந்தவங்களையும் ஏன் செக் பண்றாங்க?
பாபு : இவங்க ஏதாவது "தூக்க மருந்து" சாப்பிட்டு இருப்பாங்களோன்னுதான்.



கோபு : தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும்
பாபு : ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. ..?


நீதிபதி : வீட்டுக்கு ரெய்ட் பண்ண வந்தவங்ககிட்ட "ஈ"ன்னு உங்க பல்லை காட்டினீங்களாமே?
குற்றவாளி : என் "சொத்தை"யெல்லாம் காட்டச் சொன்னாங்க . . . அதான்.


பாபு : நம்ம ஃபைனான்ஸ் கம்பெனி முதலாளிக்கு பத்மஸ்ரீ பட்டம் தரப்போறாங்களாமே...
வேலு : நிஜமாவா?
பாபு : ஆமாம்... குல்லா போடாம எல்லோருடைய பணத்தையும் வட்டியோட திருப்பித் தர்றாரே.. சும்மாவா



தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.




அடுத்து ஒரு கதை .....


ஏமாளி!
ஒரு ஆள் சந்தைக்குச் சென்று ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கிக்கொண்டு வந்தான். அது சின்னதாக இருந்த காரணத்தால் இரக்கப்பட்டு தோளில் தூக்கிச் சுமந்துகொண்டே வந்தான். அவனுடைய கிராமம் இன்னும் தூரத்தில் இருந்தது.

அந்த ஆள் ஒரு அப்பாவிபோல் இருந்ததால் வழியில் பார்த்த நான்கு குடிகாரர்களுக்கு அந்த ஆட்டுக்குட்டியை ஏமாற்றிப் பறித்து விருந்துண்ண ஆசை ஏற்பட்டது.

அவன் போன பாதையிலேயே வேறு வழியில் முன்னால்போய் நால்வரும் தனித்தனியே கொஞ்சதூரம் இடைவெளி விட்டு வழியில் காத்திருந்தனர்.

அவன் பக்கம் வந்தவுடன் முதலாமவன் || ஏய் எதுக்காக ஒரு கழுதைக் கட்டியைச் சுமந்து செல்கிறாய்? || என்று கேட்டான். இவன் ஏமாறவில்லை. அவன் ஏதோ கேலி செய்கிறான் என்று சொல்லி சட்டை செய்யாமல் போனான்.

கொஞ்சதூரம் போனவுடன் இரண்டாமவன் எதிரில் வந்து, || என்னப்பா எதுக்கு ஒரு பண்ணியைச் சுமந்துட்டுப்போறே? || என்று சொல்லிச் சிரித்தான். இவனுக்கு என்னமோ போல் ஆகிவிட்டது.

மேலும் கொஞ்சதூரம் போனவுடன் மூன்றாமவன் எதிரில் வந்து. || அட என்னப்பா செத்த பாம்பெ இப்படியா கழுத்துலெ சுத்திட்டுப் போவாங்க? || என்றான். இவனுக்கு உண்மையாலுமே சந்தேகம் வந்துவிட்டது. என்ன இப்படி ஒவ்வொருத்தனும் ஒரு மாதிரியா சொல்லிட்டுப் போறான், நாம்ம வாங்குனது ஆட்டுக்குட்டிதானா அல்லது வேறெதாவது கிரகமா? என்று மிரண்டவனாய் நடந்தான்.

நான்காமவனும் எதிரில் வந்து || ஏப்பா தனியா ஒரு பொணத்தத் தூக்கிட்டுப்போறே || அப்படின்னு கேட்டான். அவ்வளவுதான் இவனுக்கு சந்தேகம் உறுதியாகிவிட்டது. நாம்ம ஏதோ ஒரு குட்டிச் சாத்தனெ ஆட்டுக்குட்டின்னு நெனைச்சு ஏமாந்து வாங்கிட்டு வந்துட்டோம்! தூ கிரகம்! என்று செல்லி அந்த ஆட்டுக்குட்டியைத் தூக்கிப் புதரில் எறிந்துவிட்டு ஓட்டம் பிடித்தான்.

சிறிது நேரத்தில் அது அந்தக் குடிகாரர் நால்வருக்கும் உணவாயிற்று!

நீதி: நாம் ஏமாளியாக இருந்தால் எமாற்றுவது மிக எளிது!















Monday, December 17, 2012

முல்லா கதைகள்

கழுதையால் கிடைத்த பாடம்....




ஒருநாள் முல்லாவின் நண்பர் ஒருவர் முல்லாவிடம் வந்தார்.முல்லா அவர்களே! உங்களுடைய கழுதையை எனக்கு இரண்டு நாட்களுக்கு தயவுசெய்து இரவலாகத் தாருங்கள் இரண்டு நாட்கள் கழிந்ததும் திருப்பி தந்துவிடுகிறேன் என்றார் நண்பர். அந்த நண்பர் முன்பும் இரண்டொரு தடவை கழுதையை இரவல் வாங்கிச் சென்றதுண்டு. அப்பொழுதெல்லாம் சொன்ன நாட்களில் அவர் கழுதையைத் தரவில்லை. தவிரவும் கழதைக்கு சரியான உணவளிக்காமலும் விட்டிருந்தார்.அதனால் அவருக்குக் கழுதையை இரவல் தரக்கூடாது என்று முல்லா தீர்மானித்து விட்டார்.

நண்பரே! என் கழுதை இப்போது வீட்டில் இல்லை. அதை வேறு ஒருவர் இரவலாகக் கொண்டு சென்றிருக்கிறார் என்று முல்லா கூறினார்.நண்பர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட சமயம் முல்லாவின் வீட்டுக் கொல்லைப் புறத்தில் கழுதை கத்தும் குரல் கேட்டது.முல்லா அவர்களே கழுதை வீட்டில்தான் இருக்கிறது போலிருக்கிறதே! யாரோ இரவலாகக்கொண்டு சென்றதாகக் கூறினீர்களே என்ற நண்பர் வியப்புடன் கேட்டார்.

முல்லாவுக்குக் கோபம் வந்த விட்டது. நான் சொன்ன சொல்லை நீர் நம்பவில்லை. ஒரு கழுதையின் சொல்லைத்தான் நம்புகிறீர். என் மீது நம்பிக்கை இல்லாத ஒருவருக்குக் கழுதையை இரவல் தரக்கூடாது என்பதற்காகத்தான் வேறு ஒருவர் அதைக் கொண்டு சென்றார் எனச் சொன்னேன் என்றார்.

நண்பர் அவமானமடைந்து அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்.


தலையில் விழுந்த பழம்




நமது நாட்டு ஆலமரம் போல துருக்கி நாட்டில் மல்பெரி என்ற ஒரு மரம் உண்டு நீண்ட கிளைகளுடன். உயர்ந்து அடர்ந்து செழித்து அந்த மரம் காணப்படும. ஆனால் அந்த மரத்தின் பழமோ சிறிய கோலிக் குண்டு அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும்.

ஒருநாள் முல்லா அந்த மல்பெரி மரத்தின் நிழலில் அமர்ந்து களைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது வழிப்போக்கனான ஒர் இளைஞன் அங்கே வந்து சேர்ந்தான். நீண்ட தூரத்திலிருந்து வெய்யிலில் அவன் நடந்து வந்திருக்கு வேண்டும் நிழலைக் கண்டதும் அவனுக்குப் பேரானந்தமாய் இருந்தது. மரத்திலிருந்து வேரின் மீது தலைவைத்துப் படுத்துச் சற்று நேரம் களைப்பாறினான். அவன் பார்வை முல்லாவின் மீது விழுந்தது. பிறகு அண்ணாந்து மரத்தைப் பார்த்தான் மரத்தின் சின்னஞ்சிறு பழங்கள் அவன் கண்களில் பட்டன. அவன் உரக்கச் சிரித்தான். முல்லா அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு என்ன சிரிக்கிறீர்? என்று கேட்டார். கடவுளின் முட்டாள்தனத்தை எண்ணிச் சிரிக்கிறேன் என்றான் அந்த வழிப்போக்கன்.

கடவுள் அப்படி என்ன முட்டாள்தனம் செய்து விட்டார் என்று முல்லா ஆச்சரியத்துடன் கேட்டார்.

இந்த மரத்தைப் பாருங்கள் ஒரு பெரிய கூடாரத்தைப்போல எவ்வளவு பெரிதாக இருக்கின்றது. இந்த மரத்தின் பழங்களைப் பாருங்கள் எவ்வளவு சிறியனவாக நுண்ணியவையாக உள்ளன இவ்வளவு பெரிய மரத்தின் பழங்கள் எவ்வளவு பெரியவையாக இருக்கவேண்டும் என்று கூட தீர்மானிக்க முடியாத கடவுளை முட்டாள் என்று கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும்? என்றான் வழிப்போக்கன். முல்லா பதில் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டார். சற்று நேரம் கழித்து காற்று பலமாக அடித்தது. மரத்தின் கிளைகள் வேகமாக அசைந்தாடிக் கிளைகளில் இருந்த சின்ன்சிறு பழங்கள் பொலபொலவெனக் கொட்டின. சில பழங்கள் வழிப்போக்கனின் தலையிலும் விழுந்தன.

முல்லா அவனைப் பார்த்து நண்பரே உமது தலைமீது ஏராளமான பழங்கள் விழுந்தன போலிருக்கிறதே! என்று கேட்டார். ஆமாம் காற்றில் அவை உதிர்ந்துவிட்டன என்றான் வழிப்போக்கன். கடவுள் முட்டாளாக இல்லாமலிருந்து புத்திசாலியாக இருந்து பெரிய பாறைக்கல்லைப் போன்ற பெரிய பழங்களை இந்த மரத்திலே உற்பத்தி செய்திருந்தாரானால் என்ன ஆகியிருக்கும். உமது தலை நசுங்கி நாசமாகப் போயிருக்குமல்லாவா? என்று கேட்டார் முல்லா.

வழிப்போக்கன் யோசித்தான். நண்பரே, கடவுள் சிருஷ்டியில் அனாவசியமானதும் அர்த்தமற்றதும் எதுவும் இல்லை எதையும் ஒரு காரணத்தோடுதான் இறைவன் சிருஷ்டித்திருக்கிறாரர். இவ்வளவு விசாலமான மரக்கிளைகளின் நிழலில் நிறைய மனிதர்களும் விலங்குகளும் நிழலுக்காக வந்து அண்டும் என்று கடவுளுக்குத் தெரியும் இதனால்தான் கடவுள் நிழல்தரும் பெரிய மரத்தின் பழங்களை மிகவும் சிறியனவாகப் படைத்திருக்கிறார் என்றார் முல்லா. ஐயா தாங்கள் யார் என்று தெரியவில்லையே ஒரு மகான் போல் பேசுகிறீர்களே என்று பயபக்தியுடன் கேட்டான் வழிப்போக்கன்.

கடவுள் மகான்களை சிருஷ்டிப்பதில்லை மற்ற உயிர்களைப் போல மனிதர்களையும் சிருஷ்டிக்கிறார். நான் உம்மைப்போல ஒரு மனிதன்தான் என்றார் முல்லா.



குட்டி போட்ட பாத்திரம்


ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து என் வீட்டில் குடும்ப விழா ஒன்று நடக்கிறது, புழங்குவதற்குப் போதிய பாத்திரங்கள் இல்லை உங்களிடம் இருக்கும் சொற்ப பாத்திரங்கள் இரண்டை இரவலாகக் கொடும். வேலை முடிந்ததும் திரும்பித் தந்து விடுகிறேன் என்று கேட்டார். முல்லா அண்டை வீட்டுக்காரருக்கு மிகவும் பெரிய கெட்டிப் பாத்திரங்கள் இரண்டை இரவலாகக் கொடுத்தார்.

பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மாதிரியான நையாண்டி மனிதர். யாரையும் கேலியும் கிண்டலும் செய்து சிரிக்கச் செய்வது அவரது வழக்கம். முல்லாவிடம் இரவல் வாங்கி பாத்திரத்தை அவர் திரும்பிக் கொடுக்கும் போது ஏதாவது ஒரு விதத்தில் முல்லாவை நையாண்டி செய்து பார்க்க வேண்டும் என அவர் தீர்மானித்தார். அவர் பாத்திரங்களை திரும்பிக் கொடுக்க வந்தபோது, முல்லா கொடுத்த இரண்டு பாத்திரங்கள் கூட ஒரு செம்பும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

நான் இந்தச் செம்பை உங்களுக்கு கொடுக்கவில்லையே? என வியப்புடன் கேட்டார் முல்லா. முல்லா அவர்களே உங்களுடைய பாத்திரங்கள் என் வீட்டில் இருந்த போது இந்தச் சொம்பைக் குட்டி போட்டன. அதனால் குட்டியையும் உடனே கொண்டு வந்தேன் என்றார் அண்டை வீட்டுக்காரர். சற்று யோசித்த முல்லாவுக்கு அவர் நம்மை நையாண்டி செய்வதற்காக இந்த நாடகமாடுகிறார் என்று புரிந்து கொண்டார். சந்தர்ப்பம் வாய்க்கும் போது அவருக்குச் சரியான புத்தி கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.

ஆமாம் நண்பரே பாத்திரங்களை கொடுக்கும்போது அவை கர்ப்பமாக இருக்கின்றன என்ற உண்மையைச் சொல்ல மறந்து விட்டேன் என்று கூறியவாறு அண்டை வீட்டுக்காரர் கொடுத்த பாத்திரங்களை வாங்கிக் கொண்டார் முல்லா. சில நாட்கள் கடந்தன, ஒரு நாள் முல்லா அண்டை வீட்டுக்காரரிடம் சென்று என் வீட்டில் ஒரு விசேஷம் புழங்குவதற்குத் தேவையான பெரிய பாத்திரம் இல்லை. தயவு செய்து பெரிய பாத்திரங்கள் இரண்டு கொடுங்கள் என்று கேட்டார். அந்த வீட்டுக்காரரும் இரண்டு பெரிய பாத்திரங்களை கொடுத்தார்.

முல்லா அவற்றை வீட்டுக்கு எடுத்து வந்தார். இரண்டு நாட்கள் கழித்து முல்லா ஒரு பாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அண்டை வீட்டுக்காரரிடம் சென்றார். உங்களிடம் வாங்கிய பாத்திரம் இதோ இருக்கிறது. பெற்றுக்கொள்ளுங்கள் என்றார். நான் இரண்டு பாத்திரம் கொடுத்தேனே ஒன்றுதான் திருப்பிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்? என அண்டை வீட்டுக்காரர் கேட்டார்.

முல்லா தமது முகத்தில் வருத்தம் பிரதிபலிக்க நண்பரே ஒரு தீய நிகழ்ச்சியினைச் சொல்வதற்காக வருந்துகிறேன். தாங்கள் எனக்கு அளித்த பாத்திரங்களில் ஒன்றான பெண் பாத்திரம் கர்ப்பமாக இருந்திருக்கிறது. என் வீட்டுக்கு வந்த இரவே அது பிரசவ வேதனைப்பட ஆரம்பித்து விட்டது. துரதிர்ஷ்டவசமாக அது பிரசவித்த குழந்தையும் செத்து விட்டது. தாயும் இறந்து விட்டது. அவை இரண்டையும் தகனம் செய்து விட்டேன் என்றார்.

முல்லா தனக்குச் சரியானபடி பதிலடி தருகிறார் என்பதைப் புரிந்து கொண்ட அண்டை வீட்டுக்காரர் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இனி இந்த மாதிரி உங்களை நையாண்டி செய்ய மாட்டேன். தயவு செய்து என் பாத்திரத்தைத் திருப்பித் கொடுத்து விடுங்கள் என்று வேண்டிக் கொண்டார்.

முல்லா அவருடைய பாத்திரத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார்.

Sunday, December 16, 2012

ஆபிரிக்காவின் அதிசய ஏரி!



இந்த உலகில் உல்ல பல நாடுகளிலும் நூற்றுக் கணக்கான ஏரிகள் உள்ளன. இவைகளில் பெரியனவும் சிறியனவும் உண்டு. இனிப்பு நீர் ஏரி உண்டு. உப்பு நீர் ஏரியும் உண்டு. ஆனால் அவைகளிலும் ஆராய்சியாளர்களையே திகைக்க வைக்கும் அதிசய ஏரி ஒன்றும் உண்டு. தென் ஆபிரிக்காவில் உள்ள ஃபுண்டூசி என்ற ஏரிதான் அது.


Thursday, December 13, 2012

Monday, December 10, 2012

மூடன் மட்டி மடையன் ஜோக்ஸ்....



உதைக்கிற கழுதையே உழைக்கும்........

குருதேவா! ஜமீன்தார் ஜம்புலிங்கம் வீட்டில் துணி துவைப்பதற்கு ஆள் தேவையாம். அந்த வேலையைச் செய்தால் என்ன? என்று சீடர்கள் கேட்டனர். துணி துவைக்கிற தொழிலுக்குப் பொதி சுமக்கும் கழுதை வைத்திருக்க வேண்டும். நம்மிடம் அது இல்லையே, என்ன செய்வது? என்றார் பரமார்த்தர். கழுதை இல்லாவிட்டால் என்ன? அதற்குப் பதில் தான் நாங்கள் இருக்கிறோமே! என்று சீடர்கள் கூறினர். இருந்தாலும், நிஜமான கழுதை இருந்தால் நல்லது! நல்ல கழுதையாக ஒன்று வாங்கி வாருங்கள், என்று உத்தரவிட்டார், பரமார்த்த குரு. அன்று மாலையே அவர் மடத்துகுக் கழுதை ஒன்று வந்து சேர்ந்தது. கழுதையைப் பார்வையிட்ட பரமார்த்தர், அதன் வாலைப் பிடித்து முறுக்கிப் பார்த்தார்! கோபம் கொண்ட கழுதை, விலுக் கென்று ஒரு உதை விட்டது! ஐயோ! என்று அலறியபடி தூரப் போய் விழுந்தார் பரமார்த்தர். முட்டாள்களே! என் பெருமைகளைப் பற்றி கழுதையிடம் ஒன்றுமே சொல்ல வில்லையா? என்று கோபமாகக் கேட்டார். குருதேவா! உங்களைப் பற்றி எல்லா விஷயங்களையும் தெளிவாக எடுத்துச் சொன்னோம்! அதனால்தான் உதைத்ததோ என்னவோ! என்றான் மடையன். ஆமாம் குருவே! அப்படியும் இருக்கலாம். என்று ஒத்து ஊதினான், மட்டி. பரவாயில்லை. அடிக்கிற கைதான் அணைக்கும். அதுபோல் உதைக்கிற கழுதைதான் உண்மையாய் உழைக்கும். ஆகையால் இந்தக் கழுதையே இருக்கட்டும்! என்றார் பரமார்த்தர். குருவும் சீடர்களும் கழுதை வைத்திருப்பதை அறிந்த உள்ளூர் திருடன், அதை எப்படியாவது திருடிச் செல்ல திட்டமிட்டான்.
ஒருநாள், கழுதையின் கழுத்தில் கட்டப்பட்டு இருந்த கயிற்றை அவிழ்த்துக் கொண்டு இருந்தான், திருடன். ஆனால் அதற்குள் சீடர்கள் வரும் சப்தம் கேட்கவே அவசரம் அவசரமாகக் கழுதையை மட்டும் தூர ஓட்டிவிட்டு, அதன் இடத்தில் தான் நின்று கொண்டான். வெளியே வந்து பார்த்த சீடர்களுக்கு வியப்பும் அதிர்ச்சியுமாக இருந்தது.

இதென்ன? கழுதை இருந்த இடத்தில், மனிதன் இருக்கிறானே! என்றான் மூடன். ஒருவேளை இது மாயமந்திரம் தெரிந்த கழுதையாக இருக்குமோ! எனச் சந்தேகப்பட்டான் மண்டு. அதற்குள் பரமார்த்தரும் வந்து சேர்ந்தார். உன்னைக் கழுதையாகத்தானே வாங்கி வந்தோம். நீ எப்படி மனிதமாக மாறினாய்? என்று கேட்டான் முட்டாள். நான் முதலில் மனிதனாகத்தான் இருந்தேன். ஒரு முனிவரின் கோபத்துக்கு ஆளாகி விட்டேன். அவர்தான் என்னைக் கழுதையாகப் போகும்படிச் சாபம் இட்டார்.. இப்போது சாபம் நீங்கி விட்டதால் மறுபடி மனிதனாக மாறி விட்டேன்! என்று புளுகினான், திருடன்.

திருடனின் பொய்யைப் புரிந்து கொள்ளாத பரமார்த்தர், மனிதனைக் கழுதையாக மாற்றியதால் தப்பித்தோம். அதே முனிவர் சிங்கத்தையோ, புலியையோ கழுதையாக மாற்றியிருந்தால் இந்நேரம் நம்மையெல்லாம் சாப்பிட்டிருக்கும். நல்லகாலம்! தப்பித்தோம்! என்று மகிழ்ந்தார்.
சீடர்களும், விட்டது தொல்லை, என்று மகிழ்ந்தனர். கழுதை இல்லாமலேயே ஜமீன்தார் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த சீடர்கள், துணிகளை மூட்டை கட்டி, பாசி பிடித்த ஒரு குட்டைக்கு எடுத்துச் சென்றார்கள். வெள்ளை வெளேர் என்று இருக்க வேண்டும் என்பது ஜமீன்தார் கட்டளை என்று சொல்லியபடி, வெவ்வேறு நிறங்களில் இருந்த துணிகளைக் கல்லில் தேய்த்துக் கிழித்தான், மட்டி. வெள்ளையாக இருந்த வேஷ்டியில் பாசியை தோய்த்துப் பச்சை நிறமாக மாற்றினான் மடையன். ஒரே துணியாக இருந்ததைக் கசக்கிப் பிழிந்து முறுக்கி, பல துண்டுகளாக ஆக்கினார்கள், முட்டாளும் மூடனும். அப்பாடா! ஒரு வழியாக நன்றாக வெளுத்துக் கட்டி விட்டோம்! என்று மகிழ்ந்தபடி ஜமீன்தார் வீட்டுக்குப் புறப்பட்டனர். நீங்கள் ஒரு துணி போட்டீர்கள். நான் அதையே பத்தாக்கிக் கொண்டு வந்திருக்கிறேன்! என்று பெருஐம அடித்துக் கொண்டான், முட்டாள்! வெள்ளையைப் பச்சையாக்கி விட்டேன்! என்று குதித்தான் மடையன்.

சீடர்கள் கொண்டு வந்த துணிகளைப் பிரித்துப் பார்த்த ஜமீன்தாருக்கு மயக்கமே வந்து விடும் போலிருந்தது. அடப்பாவிகளா! முழுசாய் இருந்ததை எல்லாம் கிழித்துக் கோவணத் துணிகளாய் ஆக்கி விட்டீர்களே; புத்திகெட்டவர்களை நம்பி இந்தக் காரியத்தைச் செய்யச் சொன்னேனே! என்று புலம்பியபடி சீடர்களை விரட்டி அடித்தார்.

உம்... நம் தொழில் திறமையை யாருமே புரிந்து கொள்ள மாட்டார்கள் போலிருக்கிறதே! என்று வருத்தப்பட்டபடி மடத்துக்கே திரும்பினார்கள், ஐந்து சீடர்களும்.



பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?




ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?
மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..
ஆசிரியர்: அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே?
மாணவன்: மாப்பிள்ளையா ஆவேன் சார்..
ஆசிரியர்: அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?
மாணவன்: ஒரு பொண்ணை அடைவேன் சார்..
ஆசிரியர்: முட்டாள்...பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..
மாணவன்: வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..
ஆசிரியர்: முண்டம்..உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?
மாணவன்: ஒரு பேரனோ பேத்தியோ சார்..
ஆசிரியர்: சுத்தம்..உருப்பட்ட மாதிரி தான்..



 ஆசிரியர்: "அசோகர் சாலை ஓரங்களில் ஏன் மரங்களை நட்டார்?"

மாணவன்: "நடுவில் நட்டால் போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்குமேனுதான்."



"டாக்டர் என் கணவரின் வாய்க்குள் எலி புகுந்துவிட்டது. உடனே வாங்க?" என்று பதறிய்படி போனில் அளைத்தாள் அவள்.

"ஒரு வடை அல்லது தேங்காய்த்துண்டை உங்கள் கணவரின் வாய்க்கு நேராகப் பிடித்துக்கொண்டு இருங்கள் வாசனையைப் பிடித்துக்கொண்டு எலி வெளியே வந்துவிடும். நானும் இதோ புற்ப்பட்டு வருகிறேன்" என்றார் டாக்டர்.

டாக்டர் வந்தபோது அந்தப் பெண் கணவனின் வாய்க்கு நேராக மாமிசத்துண்டை பிடித்துக்கொண்டிருந்தாள். "எலிக்கு மாமிசம் பிடிக்காதே அதை ஏன் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்" என்று டாக்டர் கேட்டார்.
இது எலிக்கு இல்லை டாக்டர். எலியைத் துரத்திக்கொண்டு வாய்க்குள் ஒரு பூனையும் நுழைந்துவிட்டது. அதற்காகத்தான் இந்த மாமிசத்துண்டு என்றாளே பார்க்கலாம்.




Sunday, December 9, 2012

யாழ்ப்பாணத்து நண்டுகளின் விசித்திர குணம்.



யாழ்ப்பாணத்து நண்டுகளின் விசித்திர குணம்.

அமரிக்க மாநிலமொன்றில்  நண்டுக் கண்காட்சி நடந்தது. பல அயல் நாட்டு நண்டுகளுடன் யாழ்ப்பாணத்து நண்டுகளும் கொண்டுவரப்பட்டது. நாடு இடம் மாவட்டம் பெயர்களுடன் நூற்ரறுக்கண்க்கான கண்ணாடிப் பெட்டிகளில் வைத்து மூடி போட்டு மூடியிருந்தனர்.

ஒரு கண்ணாடிப் பெட்டிடயிலிருந்த நண்டுகளுக்கு மூடி போட்டு மூடாமலிருந்தது. ஆனால் ஒரு நண்டும் வெளியேறவில்லை.இதை அவதானித்த வெளிநாட்டுப் பத்திரிகை நிருபரொருவர் வியப்புடன் விளக்கம் கேட்டார். அமைப்பாளர் விபரம் சொன்னார். மற்றைய நண்டுகளில் ஒன்று வெளியேர முயற்சி செய்தாலும் மற்றைய நண்டுகள் உதவி செய்து தப்பிக்க வைத்து அனைத்தும் த்ப்பித்துவிடும், ஆனால் யாழ்ப்பாணத்து நண்டுகளின் விஷயம் அப்படியில்லை ஒன்று வெளியேற முயற்சித்தாலும் மற்றயவை பிடித்து கீழே இழுத்துவிடும். அதனால் ஒன்றுமே வெளியேறமாட்டாது. மூடிபோட்டு மூட வேண்டிய அவசியமும் கிடையாது என்றார்.



அம்மா : திப்பு சுல்தான் யாரு ??

    பையன் : (கொஞ்சம் நேரம் யோசிச்சிட்டு ) தெரியாது ..

    அம்மா : ஒழுங்கா பாடத்து மேல கவனம் வச்சா தெரியும்

    பையன்: சரிம்மா புவனா யாரு ??

    அம்மா : யாருடா ??

    பையன்: ஒழுங்கா அப்பா மேல கவனம் வச்சிருந்தினா தெரிஞ்சிருக்கும் ;)



LoVe
L >>>லோ லோனு அலையணும்

O >>>ஓவரா சீன் போடணும்

V >>> வீட்டுக்கு தெரியாம பேசணும்

E >>>இழுத்துட்டு ஓடனும்



சிஷ்யன் : குருவே பெண்ணாசை அறவே ஒழிய தாங்கள் அருள் புரிய வேண்டும்

ஆனந்தர் : பின்ன எதுக்கு இந்த ஆசிரமத்துக்கு வந்தாய் சிஷ்யா ?



"ஆபீஸ் ஸ்டோர் ரூம்ல ஒரு பாம்பைப் பார்த்தோம்...!"
"ஐயய்யோ, என்ன பண்ணுச்சு...?"
"அதுவும் தூங்கிட்டு இருந்துச்சு...!"

Saturday, December 8, 2012

பால் கெட்டுப்போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?





டீச்சர்: பால் கெட்டுப்போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மாணவன்: மீதம் வைக்காமல் குடித்துவிட வேண்டும்!


தந்தை: ஆங்கில எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

மகன்: எனக்குச் சரியாகத் தெரியாது.

தந்தை: பத்துவயதாகிறது இது கூடத்தெரியவில்லயே!

மகன்: உங்களுக்கு நாற்பது வயதாகிறது; உங்களுக்க்கே தெரியாமதானே என்னிடம் கேட்கிறீர்கள்.


டீச்சர்: மழைக்காலத்தில் பறவைகள் ஏன் தெற்கு நோக்கிப் பறந்து போகின்ற?

மாணவன்: அவற்றால் அவ்வளவு தூரம் நடந்து போக முடியாதே!


டீச்சர்: ஹோம் ஓர்க் செய்திட்டியா?

மாணவி: செய்திட்டேன் டீச்சர்.

டீச்சர்: என்னென்ன செய்தே?

மாணவி: வாசல் பெருக்கி, தண்ணி தெளிச்சுக் கோலம் போட்டேன். அப்புறம்--



தந்தை: கணக்கு பேப்பரிலே ஏண்டா எட்டு மார்க் வாங்கினே?

மகன்: எட்டு என் லக்கி நம்பர்ப்பா...



பள்ளியின் அருகே ஓர் அறிவுப்புப் பலகை.

வாகனங்களை மெதுவாக ஓட்டிச்செல்லுங்கள். மாணவர்களைக் கொண்றுவிடாதீர்கள்!

அதற்குக் கீழே ஒரு மாணவனின் குறிப்பு:

ஆசிரியர் வரும்வரை காத்திருங்கள். 



பாபு: ஆகா! "என்ன அருமையான காட்சி" இதுதான் எனக்கு ரெம்பவும் பிடிச்சிருக்கு.

ஆசிரியர்: வெரிகுட் பாபு இயற்கைக் காட்சிகளை இப்படித்தான் ரசிக்கனும்.

பாபு: இது இயற்கைக் காட்சியில்ல சார் நம்ம பள்ளிக்கூடம் தீப்பிடிக்க ஆரம்பிச்சிருக்கு..