Thursday, January 10, 2013

நகைச்சுவை







என்னோட அட்ரஸ் வேணும்னு நிறைய பேர் கேட்டுக்கிட்டே இருக்காங்க,இதோ,  ஜே.நெப்போலியன்,சன் ஆஃப் மார்க்கோபோலோ,எம் சி இல்லம்,மானிட்டர் நகர்,ஓல்டு மங்க் முதல் கட்டிங்க்,கிங் ஃபிஷர் ஏரியா,விஸ்கி தாலுகா, ரம் டிஸ்டிரிக்ட்,பின்கோடு -60005000.



டேய் எந்த சப்ஜெக்ட்ல நூறு மார்க் வாங்கியிருக்கற..?”

”எல்லா சப்ஜெக்ட் மார்க்கையும் கூட்டிப் பாருப்பா... நூறு வரும்!!”




”மச்சி! வாயில இருக்கற தம்மை எடுடா.... சகுனம் சரியில்ல”

ஏன்?....பூனை குறுக்க போச்சா?”

”பூனை போகலடா...உங்க அப்பாதான் குறுக்க போனாரு பாக்கலையா..?”

 


 சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?

இன்டெர்வியுக்கு சென்றவர்: ஒ! நிறைய! என் வீடு, கார் மற்றும் என்னுடைய மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!



 சந்தோசத்துக்குப் பஞ்சமே இல்லையாமே, அமைச்சரே !'

'மண்ணாங்கட்டி ! பஞ்சத்தாலே சந்தோசமே
இல்லேங்கறதுதான், உண்மை !' 




நம் நாட்டு மக்களுக்கு விடிவுகாலம் வரப்போகிறது
மன்னா !'

'எப்படிச் சொல்கிறாய் ?'

'பக்கத்து நாட்டு மன்னன் நம் மீது போர் தொடுக்கப்
போகிறான் !'  




மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை
என்று அறிவித்து விடலாமா அரசே?'

'வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம்
படையில் சேர்த்துக்கொள்ளுங்கள்!'
 




ஒருவன்;" இந்த எறும்பு சாக்பீசை பார்த்தபிறகுதான் எனக்கு ஒரு விஷயம் புரியுது!"
இரண்டாமவன்:"என்ன புரிஞ்சிடுச்சு?"
முதலாமவன்:"எங்கயாவது ஆக்ஸிடெண்ட் நடந்தா போலீஸ் எதுக்கு சாக் மார்க் போடறாங்க?"
இரண்டாமவன்:"எதுக்கு?"
முதலாமவன்:"எறும்பு வராம இருக்கத்தான்"

 

Tuesday, January 8, 2013

நகைச்சுவை கதைகள்…





பீர்பால்..புகையிலை போடும் பழக்கம் உள்ளவர்.
ஒருநாள் அக்பரும்,அவரும் உலாவச் சென்றனர்.வழியில்...புகையிலை தோட்டத்தின் நடுவே செல்ல நேர்ந்தது.அங்கே அப்போது நுழைந்த கழுதை ஒன்று..புகையிலை நெடியால் முகத்தை திருப்பிக் கொண்டது.

உடனே..அக்பர்...'பார்த்தாயா..பீர்பால், புகையிலையை கழுதை கூட விரும்பவில்லை' என்றார்.

தமது புகையிலையைப் போடும் பழக்கத்தையே அவ்வாறு கிண்டல் செய்கிறார் என்பதை அறிந்த பிர்பால்.ஆம்..மன்னா..கழுதைகள்தான் புகையிலையை விரும்பாது என்றார். 






ஒரு வக்கீல் இறந்து சொர்க்கம் போனாராம்.வாசலிலேயே ஒரு தேவதை தடுத்து நிறுத்தி "நீங்கள் வக்கீலா?" என்றார்.
அவரும் "ஆமாம்"
தேவதை,"இல்லை சொர்க்கத்திற்குள் வக்கீல்களை நாங்கள் அனுமதிப்பதில்லை"
"ஒரு நிமிஷம் நான் நல்லவன் உண்மையிலேயே"
"அப்படியா...சரி எப்படி ஒப்புக்கொள்வது?"
"ஆஹ்... நான் இறப்பதற்கு மூன்று நாட்கள் முன்பு பசியில் இருந்த ஒருவருக்கு பத்து ரூபாய் தந்தேன், நேற்று கூட வீடில்லாத ஒருவருக்கு ஐந்து ரூபாய் தந்தேன்,சாவதற்கு ஒரு நிமிடம் முன்பு கூட ஒரு பிச்சைக்காரனுக்கு இரண்டு ரூபாய் தந்தேன்"
"ஓ சரி ஒரு நிமிடம் இருங்கள் கடவுளிடம் பேசி விட்டு வருகிறேன்"

கொஞ்ச நேரம் கழித்து தேவதை வந்து,"இந்தாருங்கள் உங்கள் 17 ரூபாய் கூட சேர்த்து 3 ரூபாய் ஜஸ்ட் GO TO HELL YOU...!"






ஒரு டீச்சர் பாடம் நடத்திட்டு இருந்தாங்க "திமிங்கலத்தால மனுஷன முழுங்க முடியாது அது பெரிசு தான் ஆனா வாய் சின்னது அதனால மனுஷன முழுசா முழுங்க முடியாது" உடனே ஒரு பொண்ணு கேட்டுச்சு,"இல்லையே எங்க பக்கத்து வீட்டு ஜானை ஆறு மாசம் முன்னாடி திமிங்கலம் முழுங்கிச்சே" டீச்சருக்கு கடுப்பு திரும்பவும் சொன்னாங்க,"இல்ல கண்டிப்பா திமிங்கலத்தால முழுங்க முடியாது"
அந்தப்பொண்ணு,"சரி சொர்க்கத்துக்கு போனா நான் ஜான் கிட்ட கேப்பேன்"
டீச்சர்,"ஒரு வேளை ஜான் நரகத்துக்கு போயிருந்தா...."

" நீங்க கேளுங்க"






ஒரு காலேஜ்ல பசங்க பொண்ணுங்க ஹாஸ்டலுக்குள்ள போறாங்கன்னு நிறைய கம்ப்ளைன்ட்.அதுக்கு ஸ்ட்ரிக்ட்டா நடவடிக்கை எடுக்க முடிவு பண்ணி அதை சொல்ல பிரின்ஸிபால் ஒரு கிளாஸ்க்குள்ள போனாரு.மாணவர்கள் எல்லாரும் அமைதியாயிட்டாங்க,"நீங்க லேடீஸ் ஹாஸ்டலுக்குள்ள அடிக்கடி போறதா கம்ப்ளைன்ட் வந்திருக்கு இனி யாராவது அப்படி நுழையறது கண்டுபிடிக்கப்பட்டா 500 ரூபா ஃபைன்" அப்டின்னுட்டு நிறுத்தினார்.பசங்களுக்குள்ள பரபரன்னு சத்தம், "இரண்டாவது தடவ போறது தெரிஞ்சா 1000 ரூபா அபராதம்" லேசா பசங்களுக்குள்ள முணுமுணுப்பு வந்தது
ரியாக்ஷன்ல திருப்தியான பிரின்ஸிபால் திரும்ப கடுமையான குரல்ல சொன்னார் "அதையும் மீறி திரும்ப மாட்டினா 2000 ரூபா கட்டணும்"

பின்னால இருந்து ஒரு பையன் கேட்டான்,

"ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"





நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தக் கூடையின் மேல், "ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்;
கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என எழுதி இருந்தது.

சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது:
'எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!'





ஒரு இன்ஸ்பெக்டர்(கல்வி) ஒரு வகுப்பறைக்கு சென்று ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது ஒரு மாணவன் எலெக்ட்ரிசிட்டி என்பதை எலெக்ட்ரிகுட்டி என்கிறான். இன்ஸ்பெக்டர் ஆசிரியரைப் பார்க்கிறார். அவர் விடுங்க சார், அவன் கப்பாகுட்டி அவ்வளவுதான் என்றார். பின் தலைமை ஆசிரியரைப் பார்க்கிறார் இன்ஸ்பெக்டர். அவர் சாரி சார், இதை பப்ளிக்குட்டி பண்ணி விடாதீர்கள் என்றார்.
அதே இன்ஸ்பெக்டர் நொந்து நூடுல்ஸ் ஆகி அடுத்த வகுப்பறைக்கு சென்றார். அப்பொழுது ராமாயணம் நடத்திகொண்டிருந்தார் ஆசிரியர். ஆய்வாளர் ஒரு மாணவனிடம் தசரதனின் வில்லை யார் ஓடித்தர்கள் என்று கேட்டார். அவன் அழுது கொண்டே சத்தியமாக நான் ஒடிக்கவில்லை என்றான். ஆய்வாளர் வகுப்பாசிரியரைப் பார்த்தார். அவர் ஆமாம் சார் அவன் அப்படித்தான் செய்த குற்றத்தை எப்பவுமே ஒத்துகொள்ள மாட்டான் என்றார். உடனே தலைமை ஆசிரியர் ஆய்வாளரிடம் "விடுங்க சார், அந்த வில்லுக்குப் பதிலாக எவ்வளவு செலவு ஆனாலும் புதியதாக ஒரு வில்லை வாங்கிவிடலாம்" என்றார்.


 அந்த ஆய்வாளர் பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடி விட்டார்.

Monday, January 7, 2013

வானத்தில் பறந்த தங்கப் பறவை!

  வானத்தில் பறந்த தங்கப் பறவை!


ஒருநாள் முல்லா ஒரு காட்டு வழியாக வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு முரடனிடம் அவர் சிக்கிக் கொண்டு விட்டார்.

அந்த முரடனுக்கு முல்லாவைப் பற்றியும், அவருக்கு இருக்கும் புகழைப் பற்றியும் நன்றாகத் தெரியும்.

அவரை அவமானப்படுத்த எண்ணிய முரடன் தன் கைவாளை உருவிக் கொண்டு " முல்லா அவர்களே உம்மைப் பெரிய மேதாவி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் உம்முடைய அறிவினாலேயே தப்பிப் பிழைப்பீர் என்றும் பேசிக் கொள்கிறார்களே அது உண்மைதானா?" என்று கேட்டான்.

" மக்களுக்குப் பொய்பேசத் தெரியாது.. அவர்கள் உண்மையைத்தான் பேசுகிறார்கள்" என்றார் முல்லா.

" அப்படியானால் உமது அறிவுச் சாதுரியத்தை நிரூபித்துக் காண்பியும் பார்க்கலாம். இதோ இந்த உடை வாளால் உமது கழுத்தை வெட்டப் போகிறேன், உம்மால் தப்பிப் பிழைக்க முடியுமா ?" என்று முரடன் கேட்டான்.

" உம்முடைய கைவாளுக்குத் தப்பிப் பிழைக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை" என்று கூறிய முல்லா திடீரென வானத்தைப்பார்த்து விட்டு மகிழச்சியுடன் சிரித்தார்.

" என்ன சிரிக்கிறீர் " என்று முரடன் கேட்டான்.

" அன்பரே, உமது கைவாள் எனது தலையைத் துண்டிக்கும் முன்பு அதோ வானத்திலே கண்களைப் பறிக்கும் அழகுடன் சிறகுகளை அசைத்துப் பறக்கும் அந்த வினோதமான தங்கப் பறவையை ஆசை தீரப் பார்த்து விடுகிறேன். அதற்குப் பிறகு நீர் எனது தலையை வெட்டி விடலாம் " என்றார் முல்லா.

" தங்கப் பறவையா வானத்தில் பறக்கிறது?" என்ற முரடன் வியப்புடன் ஆகாயத்தை அண்ணாந்து நோக்கினான்.

முல்லா குபீரெனப் பாய்ந்து முரடன் கையிலிருந்த வாளைத் தட்டிப் பறித்து விட்டார்.

" நண்பனே, உம்முடைய உயிர் என் கையில் இருக்கிறது. நான் நினைத்தால் உமது தலையை வெட்டி வீழ்த்திவிட முடியும் " என்றார் முல்லா.

" முல்லா அவர்களே நீர் வெற்றி பெற்றுவிட்டீர் என்னை மன்னிக்க வேண்டும்" என்று முரடன் தாழ்ந்து அவரை வணங்கினான்.

" அன்பனே, கடவுள் சித்தமில்லாமல் எந்த உயிரையும், யாரும் அழித்துவிட முடியாது என்பதை உணர்ந்து கொள்ளும் " என்று கூறி வாளை முரடனிடம் கொடுத்து விட்டு முல்லா தன்வழி நடந்தார்.  



கப்பலில் வேலை

முல்லா நஸ்ருதின் கப்பலில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்தார் .அவர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார் .அவரிடம் நேர்முகத் தேர்வு நடத்தியவர் கேட்டார் “புயல் வருமானால் என்ன செய்வீர் ?என்று .
அவர் சொன்னார் “நங்கூரத்தை நாட்டுவேன் “என்று “முன்னைவிட பெரியதாய் இன்னொரு புயல் வருகிறது அப்போது நீர் என்ன செய்வீர் ?”
“நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன் “என்றார் அவர் .இப்படி அது சென்று கொண்டு இருந்தது .
“…பத்தாவது புயல் !”
நஸ்ருதின் சொன்னார் “நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன் “
அந்த மனிதர் கேட்டார் .”ஆனால் இத்தனை நங்கூரத்தை நீர் எங்கிருந்து பெறுவீர் ?”என்று
அதற்கு நஸ்ருதின் சொன்னார் .”தாங்கள் எங்கிருந்து புயல்களை பெறுவீர்களோ அங்கிருந்துதான் “

  

மலிவான பொருள்

ஓரு தடவை துருக்கி மன்னர் - காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். அவருடைய பரிவாரத்துடன் முல்லாவும் சென்றார். மன்னர் பரிவாரத்துடன் சமையல்காரர் குழு ஒன்றும் சென்றது.

சமையல்கார குழுவின் தலைவன் காட்டில் கூடாரமடித்து சமையல் செய்வதற்கான ஏற்பாடுகளில் முனைந்தபோது அரண்மனையிலிருந்து உப்பு எடுத்து வர மறந்து விட்டது தெரிந்தது.

சமையற்காரத் தலைவன் மன்னர் முன் சென்று அச்சத்தோடு தலை கவிழ்ந்து நின்றான்.

" என்ன சமாச்சாரமஞ் என்று மன்னர் விசாரித்தார்.

சமையல் குழுத்தலைவன் நடுங்கிக்கொண்டே தான் உப்பு எடுத்து வர மறந்துவிட்ட செய்தியைச்
சொன்னான்.

மன்னர் சமையல் குழுத் தலைவனைக் கடுமையாகக் கண்டித்தார். பிறகு தனது வீரர்களில் ஒருவனை அழைத்து நீ குதிரை மீதேறி அண்மையிலிருக்கும் கிராமத்திற்குச் சென்று யார் வீட்டிலாவது கொஞ்சம் உப்பு வாங்கிவா என உத்திரவிட்டார்.

அப்போது முல்லா முன்னால் வந்து மன்னரை வணங்கினார்.

" என்ன முல்லா ஏதாவது சொல்ல வேண்டுமா?" என்று கேட்டார் மன்னர்.

ஆமாம் மன்னவா படை வீரனிடம் கொஞ்சம் காசு கொடுத்து அனுப்புங்கள், குடிமக்களிடம் உப்பு இனாமாகக் கேட்க வேண்டாம் என்றார் முல்லா.

ஏன் குடிமக்கள் ஒரு கை உப்பை இலவசமாகக் கொடுக்க கூட முடியாத நிலையில் இருக்கிறார்களா என மன்னர் ஆச்சரியந்தோன்றக் கேட்டார்.

மன்னர்பெருமானே நான் சொன்னதன் உட் பொருளைத் தாங்கள் விருப்பம் அறிந்தால் மக்கள் ஒரு மூட்டை உப்புகூட இனாமாகக் கொடுப்பார்கள். ஆனால் மக்களுக்கு உங்கள்மீது இருந்த மரியாதை போய்விடும் என்றார் முல்லா.

" ஏன்?" என்று கேட்டார் மன்னர்.

ஏன்ன காரணத்தினால் நாம் உப்பு கேட்கிறோம் என்று மக்களுக்குத் தெரியாது. உப்பு மிகவும் மலிவான பொருள். பரம ஏழை வீட்டிலும் உப்புக்குப் பஞ்சமிருக்காது. மன்னரிடம் உப்பு இல்லாமல் இல்லை. உப்பு கேட்கிறார் என்றால் அந்த அளவிற்கு அவர் நிலை கேவலமாகிவிட்டது என்று தான் மக்கள் உங்களைப்பற்றி நினைப்பார்கள். பின்னர் அவர்கள் உங்களை எவ்வாறு மதிப்பார்கள்? அதனால் நமக்குத் தேவையான உப்பின் விலை மதிப்புக்கு அதிகம் பொருளை உப்பு தருபவருக்கு கொடுத்துவிட்டு உப்பை வாங்கிவரச் சொல்லுங்கள் என்றார் முல்லா.

அவர் சொன்ன தத்துவம் சரிதான் என்று துருக்கி மன்னருக்குத் தோன்றியது. ஆகவே பணம் கொடுத்தே உப்பை வாங்கிவருமாறு படை வீரனுக்கு உத்தரவிட்டார்.  




 தத்துவஞானியிடம் வேடிக்கை


 முல்லாவின் ஊருக்கு ஓரு தத்துவ ஞானி வந்தார் ஒவ்வொரு நாளும் மாலையில் பொதுமக்கள் அடங்கிய ஒரு கூட்டத்தில் தத்துவ ஞானி சொற்பொழிவாற்றினார்.
ஓருநாள் தத்துவ ஞானி சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போது கீழக்கண்டவாறு ஒரு தத்துவத்தைக் கூறினார்.

இறைவன் சிருஷ்டியில் எல்லா உயிர்களுமே சமந்தான். நாம் மற்ற மனிதர்களை மட்டுமின்றி மிருகங்கள் போன்ற உயிரினங்களையும் நமக்குச் சமமாக பாவித்து அன்புடன் நடத்த வேண்டும்.

அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். தத்துவ ஞானியிடம் ஒரு வேடிக்கை செய்ய நினைத்தார்.

உடனே அவர் எழுந்து " தத்துவ ஞானி அவர்களே, நீங்கள் கூறும் கருத்து அவ்வளவு சரியல்ல என்று எனக்குத் தோன்றுகிறது" என்றார்.

" இதை எந்தக் கண்ணோட்டத்தில் கூறுகிறீர். நீர் உமது வாழ்க்கையில் ஏதாவது சோதனை செய்து பார்த்தீரா?" என்று தத்துவஞானி கேட்டார்.

" சோதனை செய்து பார்த்த அனுபவம் காரணமாகத்தான் இந்தக் கருத்தை கூறுகிறேன் " என்றார் முல்லா.

" என்ன சோதனை செய்தீர்? அதை விளக்கமாகக் கூறும் " தத்துவ ஞானி கேட்டார்.

" நான் என்னுடைய மனைவியையும் என் வீட்டுக் கழுதையும் சரி சமமாக நடத்தினேன் " என்றார்.

" அதன் விளைவு என்ன?" என்று தத்துவ ஞானி கேட்டார்

" எனது பரிசோதனையின் விளைவாக ஒரு நல்ல கழுதையும், கெட்ட மனைவியும் கிடைத்தாள் " என்று சொன்னார்.

இதைக் கேட்டதும் தத்துவ ஞானி உட்பட அனைவரும் வாய் விட்டுச் சிரித்தனர். 




தத்துவம்…!

தத்துவம்…!


1. நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.

2. ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்… காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்… ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.

3. என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது

4. ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு

5. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.

6. நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிர் அடிச்சா திரும்ப அடிக்க முடியாது.

7. காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!


8. பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?


9. இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.


10. பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?


11. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

12. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும்இ முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

13. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது

14. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.


15. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும்இ அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

16. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.


Back to top